திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருபவர் அமீத். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். இவரது 4 வயது பெண் குழந்தை நேற்று விளையாடி கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். அருகில் உள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் அமீத் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More