Mnadu News

சீனா அமெரிக்கா வர்த்தகப்போர் – ட்ரம்பின் சூழ்ச்சி

சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கியது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒத்திசைவு ஏற்படாததால் ஜூலை மாதத்தில் இருந்து சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜூலையில் உயர்த்தியது. அத்தோடு இந்த நிகழ்வு முற்றுப்பெரும் என்று கருதிய நிலையில் அடுத்தடுத்த இரு மாதங்களில் சீனப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தியது.

இந்த அடுத்தடுத்தான அமெரிக்காவின் அடக்குமுறைகளால் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப் போர் மேலுமொரு அத்தியாயத்தை நோக்கி நகர்ந்தது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் இறக்குமதி சதவிகிதம் 47 விழுக்காடு என்ற வகையில் குறைந்தது. மேலும் சீனாவில் அமெரிக்கவின் இறக்குமதி பொருட்கள் 17 விழுக்காடாக குறைந்துள்ளது.

இது இப்படியிருக்க மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 10 % வரியை அமெரிக்க உயர்த்த திட்டமிட்டு அறிவிப்பும் வெளியானது. ஆனால் இந்த முறை சீனா அமைதியான முறையில் தீர்வைக் காண முற்பட்டது. அதனால் பேச்சு வார்த்தையில் உடன்பட்டதால் சீனா அமெரிக்கா போருக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டது,

இந்நிலையில் திடீரென சீனப்பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் வெளியிட்ட செய்திக்குறிப்பால் சீனா அமெரிக்காவில் பதட்டம் நிலவி வருகிறது. இந்த சூழலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரை சந்திக்க நிபுணர் குழுவை சீன அரசு அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Share this post with your friends