சீனா நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழையில், லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு உட்பட்ட ஜியாங்சி, ஹுனான், குயாங்சிஜுயாங் , குய்சோ உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சுமார் 1 லட்சத்து 26 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் 1,600க்கு மேற்பட்ட வீடுகள் கனமழையில் இடிந்து விழுந்தத்தில் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்
இந்நிலையில், பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அந்நாட்டின் அவசர மேலாண்மை அமைச்சகம், கனமழையில், சுமார்
16 லட்சத்து 34 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.