பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மிகப்பெரிய அளவில் கஞ்சா கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் காரை போலீசார் மறிக்க முயன்ற போது கார் நிற்காமல் சென்றது
சினிமா பாணியில் காரை விரட்டி சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கார் மீது மோதியும் தடுத்து நிறுத்தினர்.
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய அதிரடியில் கஞ்சா கடத்திய இருவரை கைதுசெய்தனர் .மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .