ஆந்திர மாநிலத்தில் தற்போதைய முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திர பாபு நாயுடு அவர்கள் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் கான்பரன்ஸ் கால் மூலம் பேசினார் .
அதில் அவர் நடந்து முடிந்த இந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 110 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என சந்திர பாபு நாயுடு கூறினார் .
தேர்தல் நாளன்று எதிர்க்கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற பல குறுக்கு வழிகளை கையாண்டனர்.வாக்களிக்க வந்த மக்களை துன்புறுத்தவும் செய்தனர் .தேர்தல் அன்று தேர்தல் இயந்திரங்கள் சரிவர இயங்கவும் இல்லை . அதனால் தேர்தலின் போது வாக்களிக்க காலதாமதங்கள் ஆனது .
ஆந்திர மாநிலத்தில் வாக்கு இயந்திரங்கள் தேவையில்லை, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது