‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தான் இந்தியன் படம் . இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிறது.சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலின் பேரனாக நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார்.
சித்தார்த்தைத் தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் இந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.பிரியா பவானி சங்கர் மட்டுமல்லாமல் இந்தியன்-2 படத்தில் நடிகை காஜல் அகர்வாலும் நடிக்கிறார்.மூன்றாவது நாயகியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கடுத்தபடியாக நான்காவது கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா ஆகிய 3 நாயகிகள் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,இந்தப் படத்தின் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தியன் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி, செந்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.