கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல் .ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து,குமாரசாமி ஆட்சியை நடத்துவதற்கு நெருக்கடி அதிகரித்தது .இந்நிலையில் ,பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கர்நாடகாவில் சட்டப்பேரவை நடைபெற்றது. இந்த சட்டப்பேரவையில் ராஜினாமா செய்தவர்களை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது .
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மதியம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள். பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என கூறினார்.