தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் செய்தது .
பாஜக ஆட்சிக்கு வந்த பின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தபால் தேர்வில் மாற்றம் என சட்டசபையில் தங்கம் தென்னரசு உரையாற்றினார். இந்நிலையில் தபால்துறை தேர்வுக்கான விவாதம் முற்றியதில் சட்டப்பேரவையில் இருந்து தற்போது திமுக வெளிநடப்பு செய்துள்ளது . சட்டசபையில் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார் .
திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தற்போது காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர் மேலும் தீர்மானம் நிறைவேற்ற அரசு ஒத்துவராததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று காங். உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர்.