Mnadu News

இன்றைய ஐ.பி.எல் தொடரில் சென்னை- டெல்லி அணிக்கிடையே மோதல்

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி அணியுடன் மோதுகிறது.இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.சென்னை அணியில் தோனி, ரெய்னா, வாட்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டெல்லி அணியிலும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பவுல்ட் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் உள்ளனர் . மேலும் முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் டெல்லி அணி களமிறங்குகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 18 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends