தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இவரது அதிரடி action நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஷால் . விஷால் மற்றும் சமந்தா நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்ற படம் இரும்புத்திரை.
இந்த படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இரும்புத்திரை 2 படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைய உள்ளார்கள் .மேலும் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .