Mnadu News

வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்த தோணி…வைரலான வீடியோ

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நாளை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்திய அணி நேற்று பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையடிய இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில், பேட்டிங்கில் தோணி, மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் ஜொலித்தனர். இருவரும் சதம் அடித்து இந்திய அணி இமாலய ரன்களை சேர்க்க உதவினர்.முன்னதாக, இந்திய அணி பேட் செய்து கொண்டிருந்த போது, 39 ஓவரை சபீர் ரஹ்மான் வீசினார். அப்போது, தோணி பேட்டிங் செய்தார். திடீரென பேட்டிங் செய்வதை நிறுத்திய தோணி, ஆட்ட விதிகளுக்கு மாறாக பீல்டரை நிறுத்தி இருகிறார்கள், ஃபீல்டர்களை மாற்றுங்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினார். எதிரணியினர் பீல்டர்களை சரியாக நிறுத்தாமல் இருந்தபோது அவர்களுக்கு உதவிய தோணியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More