இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தில் ஜோதியத்தில் நம்பிக்கையுள்ள மெக்கானிக் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். மேலும் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வரும் ரெபா மோனிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.