Mnadu News

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித் இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கபாலி காலா போன்ற மாஸ் படங்களை இயக்கினார் .

இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் நீளம் ப்ரோடேஷன் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் .சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த படம் பல விருதுகளையும் பெற்றது .

இந்நிலையில் பா ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் சிறிது காலம் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார் இவருக்கு 63 வயதாகிறது .உடல்நல குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை 2 மணியளவில் காலமானார் .

இதனையடுத்து பா ரஞ்சித் தனத்தையின் உடல் அவரது சொன்னதை ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று மாலை 5 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends