Mnadu News

கண்ணீருடன் விடை பெற்ற மாவட்ட ஆட்சியர் ரோகினி….

ஒரு மாவட்ட ஆட்சியராக பெருமைப்படுவதை விட ஒரு விவசாயின் மகள் என்பதை நான் மிகவும் பெருமைப்படுகிறேன் கடந்த காலங்களில் எத்தனையோ சால்வைகள் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்தாலும் இன்று விவசாயிகள் எனக்கு சால்வை அணிவித்து மிகப் பெருமையாக உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார் .

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக ரோகினி அவர்கள் 28 8 2017 அன்று சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஒரு நல்ல மனம் கொண்ட மாவட்ட ஆட்சியராக தனது பணியினை செய்தார் மேலும் விபத்து ஏற்படும் கால கட்டங்களில் அதை இரவு 12 மணி ஆக இருந்தாலும் சரி இரவு 2 மணி ஆக இருந்தாலும் சரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான அவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தி அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை சென்று அவர்கள் சிகிச்சை குறித்து கேட்டறிந்து சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவே அவர்கள் மீது அக்கறை எடுத்து அவர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டு வந்தார்

குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தன்னுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உடனடியாக கிடைக்க வழிவகை செய்தார் மேலும் வயதான முதியவர்களுக்கு தனது தள்ளாடும் வயதிலும் மனம் தளராமல் வாழ்வதற்கு மாதம் தோறும் அவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் வழிவகை செய்து அந்த தொகையை உடனடியாக கிடைக்கும் உத்தரவிட்டார் இவரால் பயனடைந்த முதியவர்கள் வயதானவர்கள் ஏராலம்

இதுபோன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை சுகாதார சீர்கேடுகளை கண்டறிந்து உடனடி தீர்வை கண்டவர் இந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி அவர்கள் அவர்கள் பதவியேற்ற முதல் நாளிலே விவசாய குறை தீர்ப்பு கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு தேவைப்படும் உதவிகள் பயிர்க் கடன்கள் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டவர் இந்த மாவட்ட ஆட்சியர் ஏனென்றால் இவர் சாதாரண ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த 5 பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் கஷ்டத்திலும் கல்வியை விடாமல் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து படிப்பை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்று சாதித்து ஒரு மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்று தனது பணியை சீராகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் செய்து கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் ரோகினி அவர்கள் தற்பொழுது சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் இந்த செய்தியை கேட்டு பள்ளிக்குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எண்ணிலடங்கா துயரத்தில் மூழ்கினர் சொல்லப்போனால் சேலம் மாவட்டம் ஒரு மிகப்பெரிய துயரத்தில் உள்ளது என்பதுதான் சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதுபோல ஒரு மனம் கொண்ட சிறப்பாகவும் செயல்படுகின்ற ஆட்சியரை எங்கு இனி காணப்போகிறோம் என்ற ஏக்கம் சேலம் மாவட்ட மக்களின் முகத்தில் சோகங்கள் ஆக தெரிகிறது இருப்பினும் மாவட்ட ஆட்சியர் ரோகினி அவர்கள் தனது கடைசி நாளிலும் தனது பணியை சிறப்பாக நடத்தினார் குறிப்பாக தான் பதவியேற்ற முதல் நாள் நடத்திய விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் தான் இந்தப் பணியில் இருந்து வேறு பணிக்கு செல்கின்ற கடைசி நாளான இன்றும் கூட அதே விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி விவசாயிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தனது பணியை சிறப்பாக இன்று முடித்துவிட்டார் ஆனால் முடியும் தருவாயில் ஒவ்வொரு விவசாயிகளும் இனி எங்கு உங்களை நாங்கள் காணப்போகிறோம் இங்கு இதுபோல் இனி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்குமா என்றெல்லாம் ஆட்சியரை பார்த்து கேள்வி எழுப்பினார் குறிப்பாக அதில் ஒரு விவசாயி தான் கொண்டு வந்த ஒரு சால்வையை மாவட்ட ஆட்சியர் ரோகினி மரியாதை நிமித்தமாக கொடுத்தார் அந்த சால்வையை வாங்கி வைத்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகினி இதுவரை எத்தனையோ சால்வை அணிவித்து என்னை பெருமை படுத்தினாலும் ஒரு விவசாயி கையில் இருந்து இந்த சால்வையை எனக்கு அணிவது மிகவும் பெருமைப்படுகிறேன் ஒரு விவசாயக் குடும்பத்தின் பெண்ணிற்கு ஒரு விவசாயி பாராட்டு அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பேசுகின்ற பொழுதே அவர் கண்களிலிருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்து விட்டது ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய பணியை வெற்றிகரமாக செய்து முடித்து கண்ணீருடன் விடைபெற்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More