நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
ஆயிரத்து 500 அரிசி மூட்டைகள் மற்றும் பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட 2 வாகனங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து அனுப்பப்பட்டன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து, வாகனங்களை அனுப்பி வைத்தார்.