அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என பெரும் எதிர்பார்ப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக திருவண்ணாமலை வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரிகிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார்.தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை, அ.ம.மு.க. வேட்பாளராக ஞானசேகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அருள், நாம் தமிழர் வேட்பாளராக ரமேஷ்பாபு போட்டியிட்டனர்.திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 14,70,203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,43,570 ஓட்டுகள் பதிவானது. இது 77.78 சதவீதமாகும்.
சி.என்.அண்ணாதுரை
(தி.மு.க.)- 32,683
(அ.தி.மு.க.)- 19,618
13,065 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னணியில் உள்ளார்.