சட்ட பேரவையில் ஜெயக்குமார் உரையாடிய உரையால் ஒட்டுமொத்த சட்ட சபையே சிரிப்பு சத்தத்தில் ஒலித்தது.சட்டசபையில் வோளாண்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவர் , துறை சம்பந்தமாக பேசியதன் தொடர்ச்சியாக, பல மொழிகள் நடைமுறையில் உள்ள தமிழகத்தில் அவரவர் மொழியில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தெலுங்கில் கூறினார்.
இவரது விவாதத்தை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ,மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பல மொழிகள் தெரியும் என்றும் என கூறினார்.அதன் பின்னர் அவர் கூஒருகையில், தங்களுக்கு அத்தனை மொழிகள் தெரியாது என்றும், எனவே உங்களுக்கு நன்கு தெரிந்த தமிழிலேயே மாட்லாடுங்கள் என்று கூறியதால் சட்டசபையே சிறிது நேரம் சிரிப்பலையில் ஒலித்தது .அதன் தொடர்ந்து பின்னரும் பல்வேறு அமைச்சர்களின் விவாதம் நடைபெற்றது.