தண்ணீர் பிரச்சனையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும் கழக மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் காலி குடங்களுடன் பங்கேற்று அதிமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More