Mnadu News

நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் காரணம் தெரியுமா…

சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகளால் பரபரப்பு நிலவியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதற்கு என்ன காரணம் என பலரும் தெரியாமல் குழம்பி இருக்கும் நிலையில் அதற்கான பதிலை பின்வருமாறு வருபவைகளில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.,

சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் மின்மினி பூச்சிகள் போல நீல நிறத்தில் மின்னியதாகத் ஏராளமானோர் இரவில் கடற்கரையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இத்தகைய நீலநிறம் வெளிச்சமானது டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய கடல் நுண்ணுயிர் தாவரம் ஆகும், இத்தகைய தாவரங்கள் கடலில் வாழக்கூடிய பூச்சிகள் மீன்களுக்கு அடிப்படை உணவாக இருந்து வருகின்றது.

இத்தகைய டைனோஃப்ளேஜலேட் சொல்லக்கூடிய நுண்ணுயிர் தாவரங்கள் கோடிக்கணக்கில் கடல் நீரில் காணப்படுகின்றவை , இது ஒரு இயற்கையான நிகழ்வுதான் என்று ஆராய்சியாளர்கள் கூறிகின்றனர்.இத்தகைய டைனோஃப்ளேஜலேட் தாவரங்கள் பளீர் என்று நீல நிறத்தில் வெளிச்சம் தரக்கூடியது.இத்தகைய தாவரங்களை தொந்தரவு செய்தால் தன்னுடைய உடம்பிலிருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை,

ஆனால் பகல் நேரத்தில் சூரிய ஒளி படுவதால் மனிதர்களுக்கு அது கண்ணுக்கு தெரியாது, பகலில் கருப்பு உடை அணிந்து கொண்டு, கடலின் ஆழத்தில் சென்று பார்த்தல் அதன் வெளிச்சம் நீல நிறத்தில் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.இத்தகைய தாவரங்கள், கப்பல் அதன் மீது செல்லும் போதும், கடல் சீற்றம் ஏற்படும்போது தொந்தரவு ஏற்பட்டு அதன் உடம்பில் வெளிச்சைத்தை வெளிப்படுத்துகிறது,
வெளிச்சத்தை வெளிப்படுத்தாத போது, இந்த நுண்ணுயிர்களை சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாது மைக்ரோஸ்கோப் மூலமாக தான் பார்க்க முடியும். தற்போது இந்த வகை நுண்ணுயிர் தாவரங்களின் அதிக இனப்பெருக்கத்திற்கு தற்போது பெய்த மழையும் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

நிலப்பரப்பில் இருந்து கடலுக்கு செல்ல கூடிய மழை நீருடன், வேதி பொருட்களான பாஸ்பேட் நைட்ரேட் போன்றவை அதிகளவில் கலந்து செல்வதால் இத்தகைய நுண்ணுயிர்கள் பல்கி பெறுகின்றன. இத்தகைய வெளிச்சம் தரக்கூடிய டைனோஃப்ளேஜலேட் நுண்ணுயிர் தாவரங்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது.

Share this post with your friends