Mnadu News

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி விளையாடுவது சந்தேகம்…

ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்காக இன்று நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.ஐபிஎல் 2019 ஆம் ஆண்டிருக்கான லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளன.இந்நிலையில் முதல் 4 இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இதர அணிகள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் சென்னை அணியும், டெல்லி அணியும் முதல் இடத்தில் நிரந்தரமாக அமர்வதற்கான போட்டியில் இன்று விளையாடுகின்றன.

இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணிக்கு இறுதிச்சுற்றுக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்.இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. காய்ச்சல் காரணமாக மும்பைக்கு எதிரான போட்டியின் போது தோனி ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இந்தாண்டு தோனி இல்லாத அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More