Mnadu News

அத்திவரதர் வைபவத்தின் 11 ஆவது நாள் டாக்டர் அன்புமணி இராமதாஸ் தரிசனம்

திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தின் 11 ஆவது நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வரும் நிலையில் இன்று காலை நடிகர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர்அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் டாக்டர் அன்புமணி இராமதாஸ், ஏ.கே. மூர்த்தி பா.ம. க மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வரதரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை அத்தி வரதரை தரிசிக்க உள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More