சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. ரயில் புறப்பட்டுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என அதிகாரி தகவல் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலைமறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அலால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். குடிநீர் பிரச்சனையை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ரயில் மூலம் நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு அதற்காக முதல் கட்டமாக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் ஜோலார்பேட்டை அடுத்த மேட்டூர் சக்கர குப்பம் என்னும் பகுதியில் உள்ள மேட்டூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை ராட்சத பைப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்,கடந்த வாரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேட்டு சக்கர குப்பம் பகுதியிலும் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூறிய மகேஸ்வரன் இன்னும் நான்கு நாட்களில் சென்னைக்கு கண்டிப்பாக குடிநீர் கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளும் மிக விரைவில் முடிக்கப்பட்டு கண்டிப்பாக குடிநீர் கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தார். அ
தனடிப்படையில் மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை அமைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. முதல் கட்டமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 50 வேகன் கொண்ட ரயில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.ஒரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேமிக்கப்பட்டு மொத்தம் 50 வேகனர்களில் ஒரு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்வதற்கான அனைத்து பகுதிகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் ரயில் புறப்படுவதற்கான நேரம் இன்னும் ரயில்வே துறையில் இருந்து வரவில்லை எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள். இன்று மாலை 3 மணி அல்லது இரவு 8 மணி அளவில் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான ஆயத்த பணிகளை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.