சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக தமிழக அரசு 65 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து நாள்தோறும் ரயில் மூலம் ஒரு கோடி லிட்டர் சென்னை கொண்டு செல்வதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அதற்கான திட்ட பணிகள் கடந்த 2 வாரமாக போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 வேகன்கள் கொண்ட குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு செல்ல தயார் நிலையில் இருந்தது. அதன் பின்னர் இன்று காலை 7.20 மணிக்கு ரயிலுக்கு தோரணங்களும் வாழை மரங்கள் மற்றும் பூஜைகள் செய்து குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதிகாரிகள் வெற்றிகரமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது என்று தெரிவித்தனர். நாள்தோறும் சென்னைக்கு ஒரு கோடி லிட்டர் குடிநீர் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் முன்னதாக அந்த குடிநீரை பரிசோதனை செய்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.