மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் வரிமானவரித்துறையால் செய்யப்பட்ட சோதனையில் பணம் மற்றும் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
மேலும் கையகப்படுத்தப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் துரைமுருகனுக்குச் சொந்தமானது என அதிமுகவினர் உள்ளிட்ட அவர்களின் கூட்டணிக் கட்சிகளால் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துரைமுருகன் எங்கள் வீடு மற்றும் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவதுபடி 13 கோடி ரூபாய் பணமோ, 12 கிலோ தங்கமோ கையகப்படுத்தப்பட்டது என்று கூறுவதில் உண்மையில்லை எனவும் ஒருவேளை இதை முதல்வர் நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் ஆனால் இதை முதல்வர் நிரூபிக்கத் தவறினால் முதல்வர் பதவியை விலகத் தயாரா என சவால் விடுத்துப் பேசியுள்ளார்.