அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் அந்தமான் நிகோபார் தீவும் ஒன்றாகும் . தற்போது இந்த பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . காலை 2 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 4.1 அளவாக உள்ளது . மேலும் இந்த நிலநடுக்கம் பற்றிய தகவல் இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது .
இதுவரை இந்த பகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .