நாடு முழுவதும் வரும் 17ம் தேதி அதிகாலை ஒன்றரை மணி முதல் நான்கரை மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனைமுன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 16ம் தேதி மாலை 6 மணி முதல் கோவில் நடை மூடப்படவுள்ளது.
முன்னதாக அன்றைய தினம் காலை திருமஞ்சனம் என்ற தூய்மை பணி நடைபெறுவதால் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். அதேபோல், சந்திரகிரகணம் முடிந்த பின்னரும் கோவிலை சுத்தம் செய்து, சிறப்பு அர்ச்சனைகள் நடக்கவுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த இரு தினங்களில் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசனத்துக்கான 18 மணி நேர சிறப்பு தரிசன டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.