Mnadu News

தேர்தல் பிரச்சாரமும் திரைப்பட பிரபலங்களின் கருத்துக்களும்

தமிழகத்தில் இந்த மாதம் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது . இதற்கான பிரச்சாரம் தமிழம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது . தேர்தல் கட்சிகள் பல அவரவர் பிரச்சார யுத்திகளை வைத்து பிரச்சாரம் செய்துவருகின்றனர் .

அந்த யுத்திகளில் ஒன்றாக நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வைத்து பிரச்சாரம் செய்வதுண்டு .அவர்களது புகைப்படங்களை பயன்படுத்தியதால் பல சர்ச்சைகள் உருவாகும் அதன் பிறகு சம்மந்தப்பட்ட நடிகர் நடிகைகள் ஒரு அறிக்கையின் மூலமாக இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற பதிவை வெளிவிடுவது வழக்கம் தான் .

இந்தத் தேர்தலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியாகின .இந்த தகவல் உண்மையாவதற்குள் தடுக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது .

சில அரசியல் கட்சிகள் நடக்க இருக்கும் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்துகின்றனர் .எந்த கட்சிகளும் அவரது பெயர் மற்றும் அவரது புகைப்படங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More