மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.பல்வேறு கட்சி தலைவர்கள் தொகுதி வாரியாக தங்களது வேட்பாளர்களை ஆதரித்து உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில் கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் என்பவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார் . அங்கு அவர் அதிக வாகனங்களில் சென்று தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் மேற்கொண்டார் என தேர்தல் அதிகாரிகள் போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர் .
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி இந்த வழக்கை ஏற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார் .