நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையின் ஆங்காங்கே சோதனை செய்து வருகின்றனர். இதேவேளையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
சென்னையிலிருந்து படப்பிடிப்பு செலவுகளுக்காக பணத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். அப்போது தேர்தல் பறக்கும் படை சோதனை காரணமாக இவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
சில நேரங்களில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக படப்பிடிப்பு குழுவிற்கு பணம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தனுஷின் ‘அசுரன்’ உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பு ஏப்ரல் 23ம் தேதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.