தமிழகத்திற்குரிய காவிரி நதிநீரைப் பெற்று வருகிற ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.ஜூனிலிருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் ஜூன் முதல் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்திற்குரிய 177.25 டி.எம்.சி நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டி.எம்.சி. வீதம் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்து விட்டதா என்பதற்கும் பதில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More