Mnadu News

பொறியியல் படிப்பு கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்தது…அண்ணாபல்கலை கழகம்

அண்ணா பல்கலைக்கழக உரிமம் பெற்ற கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. மாணவர்கள் சேர்க்கை, தேர்வுகள் உள்ளிட்டவற்றை பல்கலைக்கழகம் நடத்தி வந்தது.

இந்தநிலையில் ,பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவு அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 200-ம் ஆண்டு படிப்புக் கட்டணம் உயர்த்தப்பட்டது. நிதிச்சுமையை கணக்கில் கொண்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணம் உயர்த்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Share this post with your friends