Mnadu News

சசிகலா மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்த எழும்பூர் நீதிமன்றம்

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி என தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, பாஸ்கரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று சசிகலா வீடியோ கான்பரன்சிங்கிலும் பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More