தாராபுரம், பொள்ளாச்சி ரோட்டில், ராஜூ என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பர்தா அணிந்த, இரு பெண்கள் கை குழந்தையுடன் நகை வாங்க வந்தனர். பழைய தங்க நகையை மாற்றி கொடுத்து, புதிய நகை எடுக்க வேண்டும் என்று கூறினர். கடை ஊழியர் நகைகளை காட்டி கொண்டிருந்தபோது, தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்த பழைய தங்க நகையை நைசாக எடுத்து கொண்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு நகையை அந்த இடத்தில் வைத்தனர்.இதை கவனித்த கடை உரிமையாளர் ராஜூ, கேட்ட போது, ஒரு பெண் தப்பியோட முயற்சி செய்தார். பொதுமக்கள் உதவியோடு அவர்களை பிடித்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சேலம், தாக்காபட்டியை சேர்ந்த ராதா, அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More