Mnadu News

9 வேடங்களில் நடிக்கும் பிரபல நடிகர்

‘அடங்கமறு’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது “இது, ஜெயம் ரவி நடிக்கும் 24வது படம்.

இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். குறிப்பிட்ட 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends