Mnadu News

நடன இயக்குனருடனான காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இதனை தொடர்ந்து ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’ உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ஹிந்தி சினிமாவில் அதிக பிரபலமானார். இந்நிலையில், நடன இயக்குனர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக மெர்வின் லூயிஸின் பிறந்தநாளன்று எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends