கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நார்வே தமிழ் திரைப்பட விழா, இந்த ஆண்டு தனது 10வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த விழாவை நடிகரும், இயக்குனருமான சசிகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துள்ளார்.
கடந்த 25ம் தேதி துவங்கிய இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து சசிகுமார் “நார்வே தமிழ் திரைப்பட விழாவை துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.