Mnadu News

நாளைமறுநாள் ஒடிசாவில் கரையைக் கடக்கிறது ஃபானி புயல்

அதி தீவிர புயலான ஃபானி புயல் ,வருகிற மே 3 ஆம் தேதி கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் ஆந்திராவின் பல மாவட்டங்கள் சேதங்களைச் சந்திக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஒடிசாவின் பூரியில் இருந்து தெற்கு மற்றும் தென் மேற்கே, 680 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு மத்தி மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் அது, மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசைக்கு மாறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் பிற்பகலில் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் சாந்த்பலி இடையே ஃபானி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More