Mnadu News

விதியை மீறிய ரோகித் சர்மாவுக்கு அபராதம்… ஐ.பி.எல் நிர்வாகத்தின் அதிரடி முடிவு …

ஐ.பி.எல் போட்டி விதிமுறையை மீறியதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

12-வது ஐ.பி.எல் சீசனின் 47-வது லீக் போட்டி பெரொஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 குவித்தது. ஷுப்மான் கில் 76 ரன்களும், கிறிஸ் லின் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரே ரசெல் 40 பந்துகளில் 80 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 34 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவுட்டாகிய விரக்தியில் அம்பயரை திட்டியதுடன், ஆத்திரத்தில் பேட்டால் ஸ்டம்பை அடித்துவிட்டுச் சென்றார். அவரின் நடவடிக்கையால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Share this post with your friends