நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள வல்லம் இலஞ்சி சாலையில் தனியார் மஞ்சள் பொடி எசன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. சிவகண் பட்டேல் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த பொருட்கள் பற்றி எரிந்து நாசமானது அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More