இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 63 அரங்குகள் பின்னி மில்லில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சருகுகள் மற்றும் காய்ந்த செடி கொடிகள் காரணமாக தீ வேகமாகப் பரவி அரங்குகள் முழுவதும் பரவியது.
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.