கோவையிலுள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நான்காவது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. கோவை வெள்ளலூர் பகுதியில் அம்மாநகரத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குப்பை கொண்டு வந்து கொட்டப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன் திடீரென தீப்பிடித்து மளமளவென பரவத் தொடங்கியது.
நான்கு நாட்கள் ஆகியும் தீ கட்டுக்குள் வராததால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொதுமக்களும் குழந்தைகளும் மூச்சுவிட சிரமப்பட்டு வருகின்றனர்.
குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிவதால் நோய்த் தொற்றும் ஆபாயமும் அதிகரித்துள்ளது.