Mnadu News

பாறைகள் சரிவால் இனப்பெருக்க பகுதிக்கு செல்லமுடியாமல் தவிக்கும் மீன்கள்

கனடாவில் கடந்த 2018ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது, லில்லூயட் நகரின் வடக்குபுறம் உள்ள பாறைகள் உருண்டு ப்ராஸர் ஆற்றில் விழுந்தன. ஆனால் இந்த ஆறு அடர்ந்த பகுதியில் இருந்ததால், பாறைகள் உருண்டு விழுந்து நீர் வீழ்ச்சி போல் உருவாகி இருந்தது தற்போது தான் தெரியவந்துள்ளது.

இதனால் சினூக், ஸ்டீல்ஹெட், கோஹோ, சல்மான் உள்ளிட்ட பல வகை மீன்கள் இனப்பெருக்கத்திற்காக எதிர் நீச்சலிட்டு தங்களுக்கு உகந்த பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. இதை அறிந்த அந்நாட்டு அரசு ஹெலிகாப்டர் மூலம் மீன்களை இனப்பெருக்க பகுதிக்கு எடுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Share this post with your friends