தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 54 அரசு பள்ளிகளை சேர்ந்த 5244 மாணவ, மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில், 4858 மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
92.64 விழுக்காடுபெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டம்,
ஏற்கனவே மூன்று முறை அரசுபள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றது. தற்போது நான்காவது முறையாக முதலிடத்தை பெற்றமைக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களுமே காரணம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து பள்ளிகளின் அளவில் கன்னியாகுமரி மாவட்டம் 94.81 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநிலத்தில் ஆறாவது இடத்தைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 11வதுஇடத்திலிருந்த கன்னியாகுமரி மாவட்டம் தற்போது முன்னேறி ஆறாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .