Mnadu News

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக வீசும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் , காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுரை தெரிவித்துள்ளது .
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Share this post with your friends