ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வெள்ளம் போல படையெடுத்து வருகின்றன.வனப்பகுதியை சுற்றியுள்ள அணைப் பகுதியில் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலவிதமான பறவைகள் இங்கு வந்துள்ளன. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் போன்ற பறவைகள் இங்கு தங்கியுள்ளதால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.