Mnadu News

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் மறைந்தார்

89 வயதான பாபுலால் கவுர் வயது முதிர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவ்வபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.கவை சேர்ந்த இவர் 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார். அந்த மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்எல்ஏவாக பாபுலால் கவுர் பதவி வகித்துள்ளார்.

Image result for பாபுலால் கவுர்

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் பாபுலால் கவுர் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் பல ஆண்டுகளாக பாடுபட்டதாகவும், அவர் முதலமைச்சராக இருந்த போது, மாநிலத்தின் மாற்றத்திற்காக கடுமையாக உழைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More