முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான கம்லேஷ் பால்மிகி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் குர்ஜாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து அவரது உடலானது கைப்பற்றப்பட்டுள்ளது. வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததையடுத்து அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும், அப்போது அவர் மர்மமான முறையில் உள்ளே இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.விஷம் அருந்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவரது, உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More