தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.மேலும் கோடை வெயிலை தடுக்கவும், கோடை விடுமுறையை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் குளிர் பிரதேசத்தை நோக்கி படையெடுக்கின்றன.அந்த வகையில் தமிழ்நாட்டின் குளிர்ப்ரதேசமான மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் கொடைக்கானலை நோக்கி சுற்றுலா பயணிகள் சாரை சாரையாக படையெடுத்து வருகின்றனர் .இந்நிலையில் ஆண்டுதோறும் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை காணுவதற்காகவே சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
இந்நிலையில் ,கொடைக்கானலில் நடைபெற உள்ள 58வது மலர்க் கண்காட்சிக்கான முன் ஏற்பாடு, தீவிரமாக நடைபெற்று வருகிறது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்காவில் கடந்த அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மலர்களைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், செல்ஃபி எடுத்து வருகின்றனர்.