Mnadu News

தொண்டர்களின் ஆரவாரத்தோடு வேட்பு மனு தாக்கல் செய்தார் கவுதம் காம்பீர்

டெல்லி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொண்டர்களின் உற்சாக வரவேற்போடு திறந்தவெளி வாகனத்தில் அவர் ஊர்வலமாகச் சென்றார்.

அப்போது பேசிய கவுதம் காம்பீர், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஆற்றிய பங்கினைப் போல தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

Share this post with your friends