தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை பல புதிய உச்சங்களையும் எட்டியது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 28 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 13 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 621 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 48 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.